1 / 3
The Woods

நெருப்பில் பூத்த கனவுகள்

Author ரூபேஷ்
Publisher சிந்தன் புக்ஸ்
category நாவல்
Pages 320
Edition 1st
Format paperback

₹285

₹300

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வசந்த காலத்தில் மலரும் மரங்கள் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலுக்கு எழுத்தாளர் தனது கடிதத்தில் “கனவு காண்கிறவர்களுக்காக” என்ற மற்றொரு தலைப்பையும் தனது தேர்வுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தார். “அவர்களால் பூக்களையெல்லாம் பறித்துவிட முடியும், ஆனால் வசந்த காலம் வருவதை தடுத்துவிட முடியாது” என்ற நெரூதாவின் கவிதை வரிகளும், பரிந்துரைக்கப்பட்ட தலைப்பும் இந்த நாவலின் சாராம்சத்தை சுட்டிக்காட்டுகிறது. போராட்டம் என்ற சொல்லையே அச்சத்துடன் எதிர்கொள்பவர்ளும், அதன் துயரங்களில் தளர்ந்து விழுந்தவர்களும் தங்களை மீட்டெடுப்பதற்கான உற்சாகம் வசந்தத்தைப் பற்றிய அந்தக் கவிதையில் இருக்கிறதல்லவா? வசந்தத்திற்காகக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இறுதியில் குருதி வழியும் ஒரு பாடல் மட்டுமே மிச்சமிருந்தது என எழுதியவர்களுக்கு, இனிமேலும் நம்பிக்கையோடு முன்னேறுவதற்கான உற்சாகமும் சக்தியும் மீண்டும் கிடைக்குமா? இங்கே கடந்த காலக் கதைகளை நோக்கி எழுத்தாளர் தனது விரலைச் சுட்டுகிறார்‌. வரவிருக்கும் வசந்தத்திற்காக உலகமே தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் வரலாற்றின் போக்கு எப்போதும் ஒரு படித்தானதாக இருந்ததில்லை அல்லவா!. பல கனவுகளும் பாதியிலேயே கருகிப் போனது. ஒருவேளை இதுதான் இந்த நாவலின் உள்ளார்ந்த அம்சமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக ஒரு நாவல். ஆங்கிலத்திலிருந்து மட்டுமில்லாமல், தமிழுக்கு அயலிலுள்ள திராவிட மொழிகளிலிருந்து புதுபுது ஆக்கங்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பது எமது நோக்கம். இதன் அடிப்படையில் ஏற்கனவே தெலுகு மொழியிலிருந்து பல மூலஆக்கங்களை சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ளதை வாசகர்கள் அறிவார்கள். இந்நாவல் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399