1 / 3
The Woods

எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்

Author அ. வரதராஜ பெருமாள்
Publisher சமூகம் இயல் பதிப்பகம்
category கட்டுரை
ISBN 9786249944107
Edition 1st
Format paperback

₹332.5

₹350

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இலங்கையின் இன்றைய பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள் திடீரென நிகழ்ந்ததொன்றல்ல. இந்த நிலைக்கான அடிப்படைக் காரணிகளை வரலாற்று வழியிலும் , விடப்பட்ட , விடப்பட்டுவரும் தவறுகளை தெளிவாக விளங்கிக் கொண்டும், இந்த கைசேத நிலையிலிருந்து மீட்சி பெற சிந்திக்கவுமான தேவையே இன்றைய இலங்கையின் வீழ்ச்சி நிலையை குறைந்த பட்சமாவது சீர்படுத்தி முன் கொண்டு செல்ல துணை புரியும். இந்த முக்கியமான பணியில் இதன் பல்வேறு அடிப்படைகளை விளங்கிக் கொள்வதற்கு , தமிழில் இந்த நூல் ஆக்கபூர்வமான பங்களிப்பாக இருக்கும். இலங்கையின் இன்றைய பொருளாதார திவால் நிலைக்கு , பல தசாப்தங்களாக நீடித்து வருகின்ற இன ரீதியான அரசியல் பிரச்சினைகளும் , அசமத்துவ நிலையும் ஒரு பிரதான காரணமாகும். நாட்டின் பெருமளவு வளத்தை , சொந்த நாட்டு மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்க மறுத்து, அம்மக்களை அழிப்பதற்கும், அடக்கி ஒடுக்கி வைப்பதற்குமே அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வீணாக்கி வந்துள்ளனர் . இலங்கை தமிழ்ச் சூழலில், பொருளாதாரத்துறை சார்ந்த கல்வியலாளர்களும் ஆய்வாளர்களும் உள்ளனர். ஆனால் அரசியல் , சமூகவியல் துறை சார்ந்த அறிவுடன் , இலங்கையின் பொருளாதார அடிப்படைகளையும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளையும் , பொருளாதாரத்துறை சார்ந்த கல்விப்புலத்துடனும், அறிவுடனும் எழுத இயலுமானாவர்கள் ஒரு சிலரே உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த நூலின் ஆசிரியர் தோழர் அ. வரதராஜா பெருமாள் . கிட்டத்தட்ட 50 வருட ங்களாக இத்துறைகள் சார்ந்த ஈடுபாடும் தேடலும் அறிவும் அவருக்குள்ளது. இலங்கையின் இன்றைய நிலையை அனைத்து தளங்களிலும் சீர்படுத்துவதற்கான பங்களிப்பினை செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்து சமூக, ஜனநாயக சக்திகள் முன் உள்ளது! இந்த அவசியத் தேவைக்கான சிந்தனையும், பொருளாதார அரசியல் பாடத்தினையும் தருவதற்கான அம்சங்களையும் உள்ளடக்கமாக கொண்டுள்ளது இந்த நூலின் இன்னொரு முக்கியத்துவமாகும்.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599