1 / 3
The Woods

நான் தான் ஔரங்ஸேப்

Author சாரு நிவேதிதா
Publisher எழுத்து பிரசுரம்
category நாவல்
ISBN 9789391748906
Edition 1st
Format paperback

₹1087.75

₹1145

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஔரங்ஸேப்: இதுவரை எழுதப்படாத வரலாறு, எழுதப்படாத நடையில்... ஒருவனை அடிமையாக்கி விட்டு அவன் மீது என்னதான் அன்பைப் பொழிந்தாலும் அந்த அடிமையின் மனம் அன்பு செலுத்துமா? என்னதான் தங்கக் கூண்டில் அடைத்துப் பாலும் தேனும் புகட்டினாலும் பயன் என்ன? நா குஃப்தனீ வ நா நவிஸ்தனீ சொல்லவே முடியாதது, விவரிக்கவே முடியாதது. இப்போது பேசுவது ஔரங்ஸேப் ஆலம்கீர் அல்ல. குரலிலிருந்தே தங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஆலம்கீர் சொன்ன சுயசரித்திரத்தில் ஒரு வில்லனாகவும் கடைந்தெடுத்த மூடனாகவும் சித்தரிக்கப்பட்ட முராத் பக்ஷ் பேசுகிறேன். ராணி துர்கவதிக்குக் கூட சரித்திரத்தில் இடம் இருக்கிறது. ஆனால் நானும் என்னைப் போன்றவர்களும் முழுமுற்றாகவே குரலற்றவர்களாகவும் அடையாளம் அற்றவர்களாகவும் காணாமல் போனோம்... “யாரது? பேரரசரை வணங்காமல் அவர் அருகில் வருவது?” என்று அதிகாரமாகக் கேட்ட அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் பேழையில் எதைத் துழாவுகிறான் என்று எட்டிப் பார்த்தான் ஃபிரங்கி அதிகாரி. அதில் இரண்டு அழகிய விழிகள் அந்த ஃபிரங்கி அதிகாரியை வெறித்துப் பார்த்தன. இப்போது நான் தாய்மைப் பேற்றில் இல்லை என்பதால் எனக்கு முலைப்பால் சுரக்கவில்லை. சுரந்திருந்தால் அதை எடுத்துத் தங்களுக்குக் கொடுத்திருப்பேன். அதனால் என் தாய்ப்பாலுக்குப் பதிலாக இந்த நீரைத் தங்களுக்கு அருந்தத் தருகிறேன்... நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே ஒரு அரசனின் ஸ்பரிசத்தை நம்பி வாழ்வது எத்தனை பெரிய அவலம்? தலை வெட்டப்பட்டதும் சர்மதின் முண்டம் தரையில் விழவில்லை. அதற்குப் பதிலாக எல்லோருக்கும் முன்னிலையில் கீழே குனிந்து தரையில் உருண்டு கிடந்த தலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டது அந்தத் தலையில்லாத முண்டம். இப்போது சர்மதின் தலை மீதி கலிமாவை உரத்துக் கூறியது. இல் அல்லாஹ், முஹம்மது அர் ரஸூலுல்லாஹ்… பிறகு முழு கலிமாவையும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே நடனம் ஆட ஆரம்பித்தது சர்மதின் உடல். கையில் தலை. - நாவலிலிருந்து...

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399