மோகினி வனம்book

மோகினி வனம்

Author சாண்டில்யன்
Publisher வானதி பதிப்பகம்
category சரித்திர நாவல்
Pages 364
Edition 1st
Format paperback

₹175.75

₹185

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மோகினி வனம் என்ற இந்த சரித்திர நாவலை மிகுந்த மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த உணர்ச்சிகளுடன் தமிழ் மக்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். இது நூற்றுக்கு தொண்ணூற்றொம்பது சரித்திர நிகழ்ச்சிகளைக் கொண்டதாலும் அவற்றில் ராஜபுத்ர வீரர்களின் வீரச் செயல்கள் விளக்கப்படுவதாலும் மகிழ்ச்சியும், அத்தனை வீரமும் பயனற்றுக் கோழையான ஓர் அரசனால் ராஜபுதனத்தின் வீர மரபு அழிந்ததைப் பற்றிய கதையாகையால் துக்கமும், என் மனத்தைப் பாதிக்க இம் முன்னுரை எழுதுகிறேன். கி.பி. 1784-வது வருஷத்தில் 8-வது வயதில் மேவார் சமஸ்தான அரியணை ஏறிய ராணா பீம்சீங் ஆரம்பத்தில் சிறுவயதின் காரணமாகவும் வாலிபனான பிறகு கோழை யாகவும் பெண்பித்துப் பிடித்தவனாகவும் அலைந்து அரசைக் கவனிக்காமல் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த வரலாறு Lt Col James TOD எழுதிய Annals and Antiquities of Rajasthan என்ற வரலாற்று நூலின் முதல் பாகத்தில் 183-வது பக்கம் முதல் 202-வது பக்கம் வரை விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மகாராணாவையும் மேவாரையும் எப்படியாவது காப்பாற்ற அவர் தாயார் ராம்பியாரி தேவியும், மந்திரி சோம்ஜி என்ற சோம்சந்த் காந்தியும், மகாராஷ்டிர

Related Books