1 / 3
The Woods

லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்

Author காரல் மார்க்ஸ்
Publisher விடியல் பதிப்பகம்
category மொழிபெயர்ப்பு நூல்கள்
Pages 176
ISBN 9788189867911
Edition 1st
Format paperback

₹133

₹140

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

"இப்புத்தகம் உண்மையிலேயே ஒரு மேதையின் படைப்பாகும். அரசியல் உலகம் அனைத்தின் மீதும் வானத்திலிருந்து இடி விழுந்ததைப்போல தாக்கிய ஒரு சம்பவம் நடைபெற்றது. சிலர் அந்த சம்பவத்தை தார்மீக ஆவேசத்தோடு உரத்த குரலில் கண்டித்தனர்; வேறு சிலர் அது புரட்சியிலிருந்து தங்களைக் காத்தருளும் என்றும் புரட்சியின் தவறுகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் அதை ஏற்றுக் கொண்டனர். எல்லோரும் அதைப் பார்த்து அதிசயித்தார்களே தவிர, ஒருவர்கூட அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை... பிரெஞ்சு வரலாற்றைப் பற்றி மார்க்சின் முழுநிறைவான அறிவு தேவைப்பட்டது. வேறு எந்த நாட்டைக் காட்டிலும் பிரான்சில்தான் வரலாற்று ரீதியான வர்க்கப் போராட்டங்கள் ஒவ்வொரு தடவையும் ஒரு முடிவு ஏற்படுகிற அளவுக்கு நடைபெற்றிருக்கின்றன. அவை நடைபெறுகின்ற, அவற்றின் முடிவு பொழித்துரைக்கப்படுகின்ற, மாற்றமடைகின்ற அரசியல் வடிவம் மிகத் தெளிவான உருவரைகளால் முத்திரையிடப்படுகின்றன." -- பிரெடெரிக் எங்கல்ஸ் "பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப்புரட்சி தன்னுடைய கவித்திறனைப் பழங்காலத்திலிருந்து பெறமுடியாது. எதிர் காலத்திலிருந்துதான் பெற முடியும். அது தன்னுடைய பணிகளைத் தொடங்குவது என்றால், கடந்த காலத்தைப் பற்றிய எல்லா மூட நம்பிக்கைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். முன்பு நடைபெற்ற புரட்சிகள் தங்களுடைய உள்ளடக்கத்தை தாங்களே முனைப்பில்லாமல் செய்வதற்காக உலக வரலாற்றில் கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புரட்சி தன்னுடைய உள்ளடக்கத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கு செத்துப் போனவர்களே செத்துப் போனவர்களைப் புதைக்குமாறு விட்டுவிட வேண்டும். அங்கே உள்ளடக்கத்தைக் காட்டிலும் சொற்கள் முக்கியமானவை. இங்கே சொற்களைக் காட்டிலும் உள்ளடக்கம் முக்கியமானது."

Related Books