1 / 3
The Woods

புத்துயிர்ப்பு

Author லியோ டால்ஸ்டாய்
Publisher அடையாளம் பதிப்பகம்
category மொழிபெயர்ப்பு நூல்கள்
Edition 1st
Format paperback

₹427.5

₹450

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இளமையிலே இந்த உலகில் என் மூலம் இன்பானுபவம் பெற்றீர், இனி மறுமையிலும் என் மூலம் இரட்சிப்பைப் பெறலாமென நினைக்கிறீரா? குற்றவுணர்வு, சினம், மன்னிப்பு போன்ற உணர்வுகளைப் படம்பிடிக்கும், மனத்துக்கு நெருக்கமான உளவியல் கதை புத்துயிர்ப்பு. லியோவ் தல்ஸ்தோய் தன் முதிர்ந்த வயதில் எழுதிய உலகப் புகழ்பெற்ற க்ளாசிக் நாவல். ஒரு கொலை வழக்கு விசாரணையில், நடுவர் மன்றத்தில் சக நீதிபதிகளுடன் பணியாற்றுகிறார் இளவரசன் நெஹ்லுதொவ். அன்றைய விசாரணை ஒரு பாலியல் விடுதியில் நடந்த கொலை பற்றியது. வழக்கில் கைதாகி நிற்கும் குற்றவாளியைப் பார்த்து இளவரசனின் மனம் நொறுங்கிவிடுகிறது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் அங்கே பிடிபட்டவள். கத்யூஷா எனும் அந்த இளம் பணிப்பெண், பல ஆண்டுகளுக்கு முன்பாக அவனால் மயக்கி கைவிடப்பட்டவள். இதை தன்னுடைய செயல்களுக்கானது என விளைவுகளை எதிர்நோக்கத் துணியும் நெஹ்லுதொவ், கத்யுஷாவைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய செல்வத்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் விட்டுவிட தீர்மானிக்கிறான். சைபீரியாவிற்கு அவள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவளைப் பின்தொடர்ந்து செல்லவும் முடிவெடுக்கிறான். ஆனால், இன்னொரு நபரைக் காப்பாற்றுவதன் மூலம் தனக்கான மீட்பை யாரும் உண்மையில் தேடிக்கொள்ள முடியுமா? தல்ஸ்தோயின் நாவல்களிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய நாவலான ‘புத்துயிர்ப்பு’, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காணப்படும் அநீதி, ஊழல், பாசாங்குத்தனம் போன்றவற்றின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறது. குடியானவர்களிலிருந்து மேட்டுக்குடியினர் வரை, அதிகார வர்க்கத்தினரிலிருந்து குற்றவாளிகள் வரை, அனைவரின் வாழ்க்கையையும் சித்திரிக்கும் இந்த நாவல், ரஷ்ய வாழ்க்கையின் மிக அகண்ட காட்சியை நம்முன் உருவாக்குகிறது; கூடவே தல்ஸ்தோயின் அற்புதமான கதை சொல்லும் திறனையும் வெளிப்படுத்துகின்றது.

Related Books