1 / 3
The Woods

பாற்கடல் லா.ச.ரா

Author லா.ச. ராமாமிருதம்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category நாவல்
Edition 1st
Format paperback

₹171

₹180

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

தமிழ் மொழியின் இலக்கியத் தளத்தை நவீனமாக்கியத்தில் புதுமைப்பித்தனும் லா.ச.ராவும் முதன்மையான ஆளுமைகள். சமூக வெளியின் எல்லையற்ற அடுக்குகளைச் சுழட்டிச் சுழட்டிப்போட்டு தனது மொழி ஆளுமையில் புதிய படைப்பூக்கத்தைஉருவாக்கியவர் புதுமைப் பித்தனென்றால், லா.ச.ரா. அந்த உருவாக்கத்தில் ஒரு அற்புதமான சிருஷ்டிகரத்தை நிகழ்த்தியவர்.மயக்குகிற மொழிநடையான stream of consciousness என்னும் கயிற்றரவு உத்தியைப் பாற்கடலாக மாற்றிக் கடைந்ததில், நூற்றாண்டுகள் கணங்களாக மாறுகின்றன. ஒருகணத்தில் ஒரு யுகம் பண்ண வந்த நித்தியமாய் புதிர்மொழியில் சுழல்கின்றன எழுத்துக்கள். நீட்ட நீட்ட நெளிநெளியாய்ச் சுருளும் அந்த சொற்களின் மலர்ச்சியில், தமிழின் நவீன இலக்கியம் தர்சனா மண்டலத்தின் திசையேகுகிறது.அதன் திசைமுகட்டிலே கிளைத்தெழும் காலசர்ப்பமோ, பாற்கடல் அமிர்தம் கடைந்தேகுகிறது.- கௌதம சித்தார்த்தன்

Related Books