1 / 3
The Woods

நீ இன்றி அமையாது உலகு

Author முகில்
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
category சுயமுன்னேற்றம்
Pages 160
Edition 1st
Format Paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால் , இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம். பாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன. ஆழ்ந்த அறிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, முடிவெடுக்கும் திறமை , சமூக அக்கறை, தன்னம்பிக்கை- இவை எதுவுமற்ற அந்த ரோபோக்களே நாளைய தேசத்தின் நம்பிக்கைகள் என்றால்? ஜம்பமான வார்த்தைகளால் போலி நம்பிக்கையைத் தூவும் முயற்சி அல்ல இந்தப் புத்தகம். இப்படிக்கூட இந்த உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்று ஆச்சரியத்தை அளிக்கும், அவநம்பிக்கையை அழிக்கும்,ஊக்கமூட்டும், உற்சாகபடுத்தும், தாழ்வான எண்ணங்களை தகர்க்கும், மனோதிடத்தை மேம்படுத்தும், எளிமையான கட்டுரைகளால் வலிமையாக நெய்யப்பட்டது. கல்விக்கூடங்கள் கற்றுத்தராத வாழ்வியல் விஷயங்களை தலைகோதி மென்மையாக உணர்த்துகிறது இந்நூல். எந்தவொரு மாணவனுக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் இனிய பரிசுப்பொருள்!

Related Books