1 / 3
The Woods

மர்லின் மன்றோ

Author குகன்
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
category வாழ்க்கை வரலாறு
Pages 192
Edition 1st
Format Paperback

₹157.7

₹166

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

லியனார்டோ டாவின்சியின் உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது.மறுமலர்ச்சி ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது. மோனாலிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்கலின் மொத்த உருவமாக லிசா கெரார்டினி எனும் இத்தாலி நாட்டுப் பெண்ணை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியம். அதை மாதிரியாக வைத்துக்கொண்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தயாரிக்கப்பட்டாகிவிட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை, அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை. அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர். பாப் இசைக் கலாச்சாரத்தில் போப்பாக அவர் திகழ்ந்தார். அவரை அந்த உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்த ஓவியத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த மாதிரி நோர்மா ஜீன் எனும் பெண். அவர் தீட்டிய ஓவியத்தின் பெயர் மர்லின் மன்றோ. அவளது அகால மரணத்திற்குப் பின் பொதிந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுத்திரை ஓவியமாக்கினார். வாழும் காலத்தில் மர்லின், மோனாவைப் போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்து சிரிப்பவள். தன் நடை உடை பாவனையில் காட்டிய கட்டற்ற கவர்ச்சியையும் அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள். உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக் கூத்தாடி ரசித்தவள். ஆண்வழி சமூகத்தின் அடக்குமுறைகளைத் தன் கால்களின் இடுக்கில் போட்டு புதைத்தவள். அதனால்தான் அவளை ஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டித்தியத்தை சரியாகப் பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது. மர்லின் மன்றோவின் தொழில்முறை வாழ்க்கை வன்னமயமானதாக இருந்தது. தனிப்பட்ட் வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண் , எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினால் என்பதை சுவைபடச் சொல்லும் இரத்தின சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!

Related Books


5% off எபிகூரஸ்book Add to Cart

எபிகூரஸ்

₹23.75₹25
5% off நியட்ஸேbook Add to Cart

நியட்ஸே

₹42.75₹45
5% off ரூஸோbook Add to Cart

ரூஸோ

₹28.5₹30