1 / 3
The Woods

மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்

Author அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
Publisher ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
category கட்டுரை
Pages 720
Format Hardcover

₹608

₹640

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மனு தர்ம சாஸ்திரம் என்றால், ஒரு குலத்திற்கு ஒரு நீதி வழங்கும் நூல் என்ற கருத்து அதிகம் உள்ளது. ஆனால், அதில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது என்பதை அறிய, இந்த நூல் உதவும். அந்தக்கால வருணப்படி, சத்திரியரான மனு கூறியதை, அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா , சமஸ்கிருத மூல நூலுக்கு விளக்கத்தை எளிதாக படைத்திருப்பது சிறப்பு. தர்மம் என்ற வார்த்தை, காலம் காலமாக கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் எது நியாயம் என்பதை விளக்கும் நூலாக இதைப் படிக்கலாம். "தண்ணீரில் சிறுநீர், மலம்,கோழை, அசுத்தமான பொருள், ரத்தம், விஷம் இவற்றைக் கலக்கக் கூடாது( பக்கம் 192,சூத்திரம் 56) "பாவத்திற்கு அஞ்சாத மனம் கொண்ட அரசாங்க அதிகாரிகள், தங்களிடம் ஒரு காரிய நிமித்தமாக வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அந்த காரியத்தை நிறைவேற்றித் தருவர்.லஞ்சம் தராதவர்கள் காரியம் நிறைவேற முடியாதபடி செய்வர். இத்தகையவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்து, அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் (பக்கம் 330, சூத்திரம் 124 ) இன்று நாட்டில் உள்ள நிலைமை எப்படி என்று எல்லாரும் அறிவர்.அதே போல தனது உடல் பெருக்க மற்றவற்றின் ஊனைச் சாப்பிடுவது சரியல்ல, என்ற கருத்து (பக்கம் 254) வள்ளுவர் சிந்தனையை ஒத்திருக்கிறது. இம்மாதிரி கருத்துக்களை இதில் படிக்கும் போது, நாம் இப்போது நாகரிகம் மேம்பட்டு வாழ்கிறோமா என்ற கேள்வி எழும். இருந்தாலும், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தாலும், அதை சரித்திரமாக எதிர்கால சந்ததியினர் படிக்க வேண்டும் என்ற கருத்து போல, இப்புத்தகத்தையும் படிக்கலாம் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்திக்க வைக்கிறது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599