1 / 3
The Woods

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்

Author ஆசிரியர் குழு
Publisher விகடன் பிரசுரம்
category பொது நூல்கள்
Edition 1st
Format paperback

₹156.75

₹165

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

தென்னிந்தியாவில் ஆண்ட பேரரசுகளில் விஜயநகரப் பேரரசு, வரலாற்றின் பக்கங்களில் பெரிதாகவும் பெருமிதமாகவும் பதிவாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள தற்போது ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 1336-ம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் விஜயநகரப் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசை பல மன்னர்கள் ஆட்சிபுரிந்தாலும் அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ண தேவராயர். செழிப்பான இயற்கை வளம்கொண்டு பெரும் நிலப்பரப்பாகத் திகழ்ந்தது விஜயநகரம்! தென்னிந்திய கட்டடக் கலையில் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலை குறிப்பிடத்தக்கவை. தலைக்கோட்டப் போரில் வீழ்ந்த விஜயநகரத்தின் கலைநயமிக்க கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் சிதைக்கப்பட்டன. இப்போது அங்கு சொற்பமான வரலாற்றுச் சின்னங்கள்தான் எஞ்சி யிருக்கின்றன. விஜயநகரப் பேரரசின் நினைவுச் சின்னங்கள் தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. அவற்றுள் ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்கள் பெரிதும் புகழ்பெற்றவை. விஜயநகரின் வரலாற்றை சரித்திரப் பார்வையோடு விளக்கி சக்தி விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! வரலாற்றில் இடம்பெற்ற சில இடங்கள் காலங்காலமாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் ஹம்பி. விஜயநகரில் உலா வந்து அதன் வரலாற்றைத் தரிசிக்க வாருங்கள்...

Related Books


5% off Style and Stylisticsbook Add to Cart

Style and Stylistics

₹71.25₹75