1 / 3
The Woods

கைகொடுக்கும் கிராஃப்ட்

Author வே.கிருஷ்ணவேணி
Publisher விகடன் பிரசுரம்
category தொழில்முன்னேற்றம்
Edition 1st
Format paperback

₹185.25

₹195

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்கிறபடி ‘வேண்டாம்’ என நினைக்கும் பொருட்களைக் கூட அழகிய வடிவம் கொடுத்து கற்பனைக்கேற்ற நல்ல உருவங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். காலப்போக்கில் கிராஃப்ட் என்கிற கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கென புனையப்பட்ட மினி கருவிகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கிளிஞ்சல்கள், ஐஸ் குச்சி, வண்ணக் காகிதங்கள், ரிப்பன், க்ளே, மணிகள், துண்டு கண்ணாடிகள், தெர்மாகோல், க்ளூ ஸ்டிக், ஊசி, கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் பூக்கள் என பல வித்தியாசமான பொருட்கள் இந்த கைவினை கலைப் பொருட்களை உருவாக்குவதில் இடம்பிடித்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தைப் பயனுற செலவழிக்க இது ஓரு நல்ல தொழில் மாத்திரம் அல்ல... தங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் உத்தியும்கூட

Related Books