உலக சாந்திக்குள்ள ஜீவிதம்book

உலக சாந்திக்குள்ள ஜீவிதம்

Author சுவாமி சிவானந்த பரமஹம்சர்
Publisher சித்தசமாஜம்
category சித்தர்கள்
Pages 80
Edition Latest
Format Hardcover

₹66.5

₹70

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நூல் பெருமை வீடுபேறின் பாதையை தெள்ளத்தெளிய விளக்குகின்ற சித்தவேதம், கேரளாவில் இருந்த கெட்ட வழக்க பழக் க ங் க ளை கண்டித்துக் கூறும் நூ லாகிய கேரளானாச்சாரம், வேத விதிகளுக்கு உகந்த வாழ்க்கை முறைகள் அடங்கிய சித்த வித்தியார்த்திகளின் நடவடிக்கை கி ர ம ங் க ள் , இன வேறு பா டு க ளை அறவே துண்டிக்கத்தகுந்த ஜாதி என்பது என்ன? முதலான அரிய நூல்களை இயற்றியவரும் சித்த சமாஜ நிறுவனருமான சுவாமி சிவானந்த பரமஹம்சர் தனது சீடர்கள் மூலமாக மோட்சமடையும் வழியை காண்பிக்கக்கூடிய அனேக கீர்த்தனைகளும், கடவுளின்பால் பக்திச்சுவை கனியும் பற்பல நூல்களும் வெளியிட்டுள்ளார்.உலகசாந்திக்குள்ள ஜீவிதம் எனும் இந்நூல் அவற்றினுள் ஒன்றாகும். இந்த நூலில் ஈஸ்வர தத்துவம், குரு தத்துவம், பிறப்பு இறப்புகள், புண்ணிய பாவங்கள், ஈஸ்வரசேவை அல்லது இறைவழிபாடு, அட்சராப்பியாசம், மனிதப்படைப்பு, ஜாக்கிரதை நிலமை, கர்மவிமோசனம், மும்மூர்த்திகள், சரஸ்வதி, வஸ்து அல்லது பொருள் இரவும் பகலும், காலாதீதம், மோட்சம் அல்லது வீடுபேறு, யோகம் அல்லது ஒன்றுபடல், சதுர்வர்ணம் அல்லது நான்கு இனங்கள், சக்திபூஜை, சமயம், மகாவாக்கியங்கள், ஆறு ஆதாரங்கள், பேரின்பம், சித்தசமாஜத்தின் கொள்கைகள், சமாஜத்தின் செயல்பாடுகள், சித்தவித்தை வழங்கும் முறை என்றெல்லாம் உள்ள தலைப்புகளை மேற்கொண்டு சுருக்கமாக கூறியிருப்பதை காணலாம்.சுவாமிகள் சித்தவேதத்தில் கூடுதலாக புதிய பற்பல தத்துவங்களை சேர்த்துள்ளார். அவைகளில் குறிப்பாக பிரம்மா, சரஸ்வதி, ஆறு ஆதாரங்கள், பேரின்பம் போன்ற விஷயங்களை மிகவும் விரிவான அளவில் விளக்கவும் சமாஜத்தின் கொள்கைகளில் சிறப்புடைய சிற்சில மாற்றங்கள் உண்டுபண்ணவும் செய்திருக்கிறார்,உலக சாந்திக்குள்ள வாழ்க்கை என்னும் பெயருக்கு ஏற்றவகையில் எல்லா விஷயங்களும் இடம்பெறக்கூடிய இச்சிறு நூல் படிப்பவர்களுடைய உள்ளங்களை கவரச்செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனக் குறிப்பிட்டனராம். உப்புக் கூடை இல்லையாயின் உப்பைப் பேணிப் பயன்படுத்த இயலாமல் இழந்து போகும். இங்கு உப்பு சித்தவித்தையும் உப்புக்கூடை நடவடிக்கை கிரமங்களுமாகும். நடவடிக்கை கிரமங்கள் பின்பற்றினால்தான் சித்தவித்தையை இழந்துபோகாமல் சரிவர பயிற்சி செய்து பலன் பெற இயலும்.

Related Books