சித்தவித்தியார்த்திகளின் நடவடிக்கை கிராமங்கள்book

சித்தவித்தியார்த்திகளின் நடவடிக்கை கிராமங்கள்

Author சுவாமி சிவானந்த பரமஹம்சர்
Publisher சித்தசமாஜம்
category சித்தர்கள்
Pages 48
Edition Latest
Format Hardcover

₹47.5

₹50

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

எந்தவித்தை பெறும்போதும் வித்தை காட்டி தருபவருக்கு காணிக்கைக் கொடுக்கவேண்டுமென்பது சாத்திர முடிபு. சீவரட்சைக்கான சித்த வித்தை பெறும்பொழுது நடவடிக்கை கிரமங்கள் 2,3 வகுப்புகளில் குறிப்பிட்டுள்ள சீவநாசம் செய்யும் பத்து பதினொன்று பொருள்களை காணிக்கையாகக் கொடுக்க வேண்டியது மட்டுமன்றி, அவற்றைப் பின்னர் ஒருபோதும் பயன் படுத்தவும் கூடாது. நடவடிக்கைக் கிரமங்கள் அருளிச்செய்த ஆன்மபிதா ஜெகஜோதி அவர்கள் மேற்சொன்ன காணிக்கைப் பொருள்களை வன்மரங்களொடு ஒப்பிடவும் அவை விபசாரத்தைவிட ஆபத்தானவை என விளக்கவும் செய்தனர். ஆனால் விபசாரத்தைப் புல்லுடன் ஒப்பிட்டனர். அதாவது : ஒரு குளம் தோண்டும்போது முதற்கண் வெட்டி நீக்குவது அங்கிருக்கும் வன்மரங்களையே அன்றி, புற்களையல்ல. நேர்மாறாக முதற்கண் புற்களை வெட்டி மாற்றி குளம் தோண்டினால் அங்குள்ள பெரிய மரங்கள் மேலே விழுந்து, குளம் தோண்டுபவர்கட்கு உயிர்ச்சேதம்வரை உண்டாகும். குளம் தோண்டும்போது மண்ணோடு புல்லும் போகும். எனவே குளம் தோண்டும்போது முதலில் அங்கிருக்கும் வன்மரங்களையே வெட்டி மாற்றுவர். அவ்வாறே வன்மரங்களான பத்து பதினொன்று பொருள்களை காணிக்கையாகப் பெற்ற பின்ன ரே சித்த வித் தை. உபதேசிக்கப்படும். குளம் தோண்டும்போது மண்ணுடன் புல் போவதுபோல, மற்றுள்ள விபசாரம் முதலிய தீயசெயல்கள் யாவும் சித்தவித்தை முறையாகப் பயிற்சி செய்யும்போது தாமாகவே இல்லாமலாகும். ஜெகஜோதி அவர்கள் மதுரை நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது, 'நாம் கூடை நிறைய உப்பு கொண்டுவந்தோம். உப்பைத்தான் வாங்கினர், உப்புக்கூடையை யாரும் வாங்கவில்லை ” எனக் குறிப்பிட்டனராம். உப்புக் கூடை இல்லையாயின் உப்பைப் பேணிப் பயன்படுத்த இயலாமல் இழந்து போகும். இங்கு உப்பு சித்தவித்தையும் உப்புக்கூடை நடவடிக்கை கிரமங்களுமாகும். நடவடிக்கை கிரமங்கள் பின்பற்றினால்தான் சித்தவித்தையை இழந்துபோகாமல் சரிவர பயிற்சி செய்து பலன் பெற இயலும்.

Related Books