1 / 3
The Woods

மைக்கேல் ஒண்டாச்சி: தேர்ந்தெடுத்த கவிதைகள்

Author Michael Ondaatje , Translator : பிரம்மராஜன்
Publisher யாவரும் பதிப்பகம்
category கவிதை
Pages 258
Edition 1st
Format paperback

₹389.5

₹410

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஸ்ரீலங்காவில் பிறந்த கனேடியக் கவிஞர்+நாவலாசிரியர் ஃபிலிப் மைக்கேல் ஒண்டாச்சியின் தேர்ந் தெடுத்த கவிதைகளின் புத்தகம் இது. பிற ஐரோப்பிய மொழிக் கவிஞர்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பவர்கள், மூல மொழிக்கவிஞர்களின் திருகலான வெளிப்பாடுகளையும் முடிச்சு களையும் சரிசெய்து தந்துவிடுகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதும் கவிஞர்களின் விநோத வாக்கியத் தொடர் மடக்குகளை மொழிபெயர்ப்பது எளிமையாக இருப்பதில்லை. கனேடியக் கவிஞர் மைக்கேல் ஒண்டாச்சி நமக்கு மிக நெருக்கமானவராய் இருப்பதற்கு அவரது தாய்நாடு (அன்றைய சிலோன்) மட்டுமன்றி அவருக்கு இந்திய சமஸ்கிருதக் கவிதையிலும் சங்கக் கவிதையிலும் இருக்கும் ஈடுபாடும் காரணமாகிறது. கவிதையிலும் புனைகதையிலும் சமமான சரளத்துடன் இயங்கி வருபவர். இந்நூல் அவரது கவித்துவத்திற்கு சாட்சியம் அளித்த போதிலும் அவரது புகழ் அவரது புனைவான “இங்கிலீஷ் பேஷண்ட்’’ திரைப்படமாக்கப்பட்ட பிறகுதான் ஓங்கியது. ஒண்டாச்சி ஒரு கவிஞராக எழுத்து வாழ்க்கையைத் தொடங்கி புனைகதையாளராக மாறினாலும் கவிதையை இரண்டாம் நிலை இலக்கிய வடிவமாகப் பார்க்கவில்லை. கவிதையையும் புனைகதையையும் சரிசமமாகப் பாவிப் பது கனேடிய படைப்பாளர்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஒண்டாச்சியின் ஆரம்பகாலத் (1963+67)தொகுதியிலிருந்து 2006ஆம் ஆண்டில் வெளிவந்த “ஸ்டோரி’’ என்ற கவிதைத் தொகுதி வரையிலான கவிதைகள் தேர்வு செய்து மொழி பெயர்க்கப்பட்டு காலக் கிரம மாக இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஒண்டாச்சியின் கவிதைகளின் ஊடாய் பல இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க முடிகிறது: வான் ரமோன் ஹிமினெஸ், ரில்கே, நெரூதா, ரிஹாக்கு மற்றும் பீட்டர் ஹேன்க்கே, இட்டாலோ கால்வினோ. ஓர் ஓவியக் கலைக் கோட்பாட்டாளனை விட நுணுக்கமாய் ஓவியம் ஒன்றினுள் நுழைந்து அதைக் கவிதையின் உச்சத்திற்கும் ஓவியத்தின் உச்சத்திற்கும் அவரால் உயர்த்த முடிகிறது. தழும்புகளும் காயங்களும் ஒண்டாச்சியால் வார்த்தைகளின் சமானத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150