1 / 3
The Woods

இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்

Author அப்சல் , Translator : சா.தேவதாஸ்
category மொழிபெயர்ப்பு நூல்கள்
Edition 1st
Format paperback

₹237.5

₹250

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பல தளங்களில் தனது பார்வையை விரித்து, இந்த நூலை தமிழில் எழுதப்பட்ட சினிமா பற்றிய வரலாறாக மாற்றியிருக்கிறார் தோழர் அப்சல். உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட திராவிடத் தமிழர் என்பதால் இது அவருக்கு இயல்பாகச் சாத்தியமாகி விட்டிருக்கிறது. இந்த நூலின் விரிவும் ஆழமும் தீவிரமானது. அந்தப் பார்வைகளோடு ஒத்துப்போனாலும், இதை இத்தனை இயல்பாக என்னால் சொல்ல முடிந்திருக்குமா என்பது ஐயமே. - சுபகுணராஜன் VMS ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ எனும் நூலை ஒரே இருத்தலில் வாசித்து முடித்தேன். அப்சலைத் தவிர இப்படியொரு நூலை இந்தியாவிலல்ல, உலகிலேயே எவரும் எழுதியிருக்க முடியாது. என்சைக்ளோபீடியா நாலெட்ஜ் என்று சொல்கிறோம் இல்லையா, அத்தகைய அறிவு, நூல் பேசும் பிரச்சினையில் அப்சலுக்கு இருக்கிறது. இந்த நூலை ஒரு ரெஃபரன்சாக வைத்துக்கொண்டு அதிகமான ஆய்வுநூல்கள் இனி வர வேண்டும். உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட மிக நேர்மையான ஒரு நூல் இது. தமிழ் மொழி சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே இந்நூல் ஒரு அறிவுக் களஞ்சியம். - யமுனா ராஜேந்திரன்

Related Books