|
புரிதலில் துவங்கிய அவர்களின் காதலை, அவள் தன்னுடைய இதயக் கதவில் பூட்டி வைத்த பிறகும், அதைத் தட்டித் திறக்கும் வித்தை தெரிந்தவனாக இருந்தான் அவன். அவர்களின் நேசம் இறுதிவரை தொடரும் என நம்புவோம். திருமணம் முடிந்த இந்த ஏழு வருடங்களில், ஐந்து வயது வைஷ்ணவி, பதினோரு வயது துஷ்யந்துடன் பள்ளி சென்று வருகிறாள். தருண், தன் ஐம்பதாவது படத்தை வெள்ளி விழாப் படமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். தெய்வா இப்பொழுதும் எந்த மாற்றமும் இல்லாமல், சினிமாவில் மீடியேட்டர் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். தருண், உன் தாயிடம் பேசாதே! என்று அவளைத் தடுக்கவில்லை. ஆனால் லயாவே அதை விரும்பவில்லை. தன் தாயோடான அவள் உறவு முடிந்து விட்டதாகவே இருந்தது. லயாவின் திறமை வீணாகாமல் இருக்க... அவனே ஒரு சேனல் துவங்கி, அதில் அவளது நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை நீங்களும் உங்கள் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கலாம். |