|
இந்த ஒரு நாள் விடுமுறைக்காக, அவன் பல நாள் தூக்கங்களை தியாகம் செய்திருப்பான் என அவ ளுக்குத் தெரியாதா என்ன? ஒன்பதாம் மாதத் துவக்கத் தில்தான் வளைகாப்பு வைத்து இருந்தார்கள். இன்னும் பதினைந்து நாட்கள் ஆகலாம் என அவர்கள் கணித்திருக்க... அன்று இரவே அவளுக்குப் பனிக்குடம் உடைந்து போனது. அவளோடு இருந்தவன் அதைப் பார்த்துப் பதறிப் போக, “என்னங்க, இதில் பயப்பட எதுவும் இல்லை ரேணுவுக்குக் கால் பண்ணி ஹாஸ்பிடல் வரச் சொல்லுங்க, நாமளும் போய்டலாம்." அவள் நிதானமாக இருக்கவே, அவனும் சற்று அமைதி அடைந்தான்.
மருத்துவமனைக்குச் சென்ற அரைமணி நேரத்தில் சுகப் பிரசவத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை அவள் பெற்றெடுக்க, அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்தது. பிரசவ அறையில் அவன் உடன் இருக்கவே. களைப்பில் கண் மூடியவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான். “என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பாத்ததில்லை. ஆனா எல்லாம் நடத்திக் கொடுத்திட்ட.” அவன் நிறைவாகப் புன்னகைக்க, அதில் தானும் இணைந்து கொண்டாள். இந்த அன்பும், புரிதலும் அவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்கும். |