|
அவர்களை அதிகம் சோதிக்காமல், அவர்களது தங்க மகன் பூமிக்கு வர, தன் குழந்தையைக் கரத்தில் தாங்கிய அந்த நொடி, அந்த உணர்வு... தாய்மை உணர்வு பொங்க, தனக்கு உயிரான கணவனை ஆனந்தக் கண்ணீர் மேலோங்க ஆசையாய்ப் பார்த்திருந்தாள்.
“தேங்க்ஸ்..." அவன், அவள் நெற்றியில் முத்தமிட, “நான்தான் சொல்லணும்...” அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். மூன்றாம் நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட, கோவைக்குத் தன் தாயின் வீட்டுக்குப் பயணமானாள் மித்ரா. ஒரு தாயின் உணர்வுகளை, இப்பொழுது தாயான அவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? இரு தாயும் தங்கள் சேயைச் சீராட்டக் காத்துக் கொண்டிருந்தார்கள். |