|
வாழ்க்கையில் தன் முன்கோபத்தால் எவையெல்லாம் இழந்து விட்டோம் என ஒடுங்கிப் போயிருந்தவள், இன்று பழைய ராஜாவை மீட்டு விட்ட பூரிப்பில், அவர்களையே பார்த்திருந்தாள். தன் மனைவியின் பார்வையை உணர்ந்து, நண்பனிடம் சில அடிகளைப் பெற்றுக் கொண்டவன், ஆதூரமாக அணைத்துக் கொள்ள, அப்பொழுது அங்கே வந்த பெரியவர்களின் மனமும் நிறைந்து போனது. கூடவே... சீனியும், கார்த்திகாவும் அங்கே வர, அவள் உரைத்த நல்ல சேதியில், அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது. அவர்கள் அனைவரின் வாழ்க்கையும் இதேபோல் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
|