|
நம் வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. அது சிறியதாகவோ, பெரியதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சில தவறுகளை நாம் உடனே திருத்திக்க முடியும். சில தவறுகளைச் சரிசெய்ய சில காலங்கள் தேவைப்படலாம். அதுவே சில தவறுகள், ஒரு ஜென்மம் முழுவதும் நம்மைத் தொடர்ந்து வரும். அவற்றை நாம் சரிசெய்ய முயன்றாலும், அதன் சுவடுகள், அழுத்தங்கள் நம்மைத் தொடர்ந்து வரும்.
அப்படி ஒரு தவறைத்தான் நம் கதையின் நாயகியும் செய்கிறாள். அப்படி அவள் செய்யும் தவறு... அதை அவள் செய்துவிடும் விதம்.... அதை சரி செய்கையில் நேரிடும் துன்பம்... இதைப்பற்றி சொல்வதுதான் இந்தக் கதை. அளவுக்கதிகமான பணமும், சுதந்திரமும் செல்லமும் அசட்டு தைரியமும் ஒரு பெண்ணின் வாழ்வை எங்கே கொண்டு நிறுத்தும் என்பதை மட்டுமே இந்தக் கதையில் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு ஆண் தவறு செய்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும். அதுவே ஒரு பெண் செய்தால்...? அவளைப் பெற்றவர் துவங்கி, அவளது வளர்ப்பு, ஒழுக்கம் என அனைத்தும் அங்கே விமர்சிக்கப்படும். அதேபோல், தவறு செய்த ஆண் திருந்திவிட்டால், அவனை உத்தமன் என ஏற்றுக்கொள்ளும் சமூகம், தவறு செய்த பெண் திருந்திவிட்டால் அவளை அப்படி பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. |