Description |
அண்ணாவின் “வேலைக்காரி” கருத்துக்களைப் பரப்பும் கலைக்கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் அண்ணா எழுதிய “வேலைக்காரி” சிறப்பிடம் பெறுகின்றது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் பலரும் நினைப்பதே இல்லை. வீட்டைப் பெருக்கும் துடைப்பத்தைப் போல் வேலைக்காரியை நினைத்து வந்த காலத்தில் வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித் தந்ததோடு அந்த இனத்திற்கே உயர்வையும் அண்ணா தேடித் தந்தார். வேலைக்காரிக்கு நடக்கும் சமுதாயக் கொடுமைகளைக் கூறவந்த அண்ணா அவற்றோடு ஏழையின் கண்ணீர், ஜாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரரின் ஆதிக்கம் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றார். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குச் சரியான அடியாக இந்நாடகம் விளங்குகின்றது. |