1 / 3
The Woods

கடலும் ஒரு கிழவனும்

Author எர்னஸ்ட் ஹெமிங்வே , Translator : ஆயிரம். நடராஜன்
Publisher தடாகம் வெளியீடு
category நாவல்
Pages 121
ISBN 9788195268894
Edition 1st
Format paperback

₹114

₹120

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

எது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் சில வேளைகளில்" என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன். ந் தோற்கடிக்கப்படும் போது, படுக்கைதான் உனக் குச் சிறந்தது. என்று எண்ணினான். அது எவ்வளவு சிறந்தது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. இரவு நேரத்தில் இரண்டு குட்டி டால்பின்கள் படகைச் சுற்றின. அவை உருளுவதையும் தண்ணீரை மேலே ஊதித் தள்ளுவதையும் அவனால் கேட்க முடிந்தது. ஆண் டால்பின் ஊதும் சத்தத்துக்கும் பெண் டால்பின் ஏக்கத்துடன் எழுப்பும் சத்தத்துக்கும் இடையே யான வேறுபாட்டை அவனால் கூற முடியும். “அவை நல்லவை. ஒன்றை ஒன்று நேசித்து, கேலி பேசி விளை யாடுபவை. பறவைமீன்களைப் போல் அவையும் நமது சகோதரர் கள் என்றான். நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். மிகத் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய சகோதரர்களாகிய நட்சத் திரங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ அந்த அளவு தெளி வாக இருக்கிறேன். இருந்தாலும், நான் தூங்க வேண்டும். நட்சத் திரங்கள் தூங்குகின்றன; நிலவும் சூரியனும் தூங்குகின்றன.

Related Books