1 / 3
The Woods

சாமானிய மனிதனின் எதிர்க்குரல்

Author விஜய் மகேந்திரன்
Publisher கடல் பதிப்பகம்
category கட்டுரை
Pages 126
Edition 1st
Format paperback

₹114

₹120

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார். திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த நூலின் உள்ளடக்கத்தை மூன்றாக வகுக்கலாம். ஸ்ரீதேவி, ரேகா, ரஹ்மான், பிரசன்னா, எடிட்டர் லெனின், களஞ்சியம், ராம்பால், கேபிள் சங்கர், கீரா, சாம்ஸ், மீரா கதிரவன் என பல திரைத்துறையினரை பற்றிய தன் அவதானிப்புகளையும் அவர்களுடனான உறவையும் பற்றி சுவாரசியமாக எழுதியிருக்கிறார். இவைத் தவிர்த்து ‘மூன்று முடிச்சில்’ வெளிப்பட்ட ரஜினியின் நடிப்பு, முருகேசபாண்டியனின் சினிமா நூல் குறித்த அறிமுகம், யுவ கிருஷ்ணாவின் நடிகைகள் பற்றிய நூல் அறிமுகம் என சினிமாவின் வெவ்வேறு தளங்களை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. விஜய் மகேந்திரனின் வாசிப்பு வேட்கையை பறைசாற்றுவதாகவும் இத்தொகுப்பு உள்ளது. இளங்கோ கிருஷ்ணன், நரன், குமரகுருபரன், ஷோபா சக்தி, நிலா ரசிகன், லீனா மணிமேகலை, கிராபியன் ப்ளாக், பிரியா தம்பி, விஜயபத்மா, அனிதா, சுதேசமித்திரன் என பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். கவிதைகள் தேர்வும் அது குறித்து அவர் எழுதும் குறிப்புகளும் சிறப்பாக உள்ளன. இவையிரண்டும் தவிர்த்து வாழ்வியல் பற்றிய கட்டுரைகள், குறிப்பாக சென்னை நகரத்தின் சூழ்ச்சி மிகுந்த வாழ்வு வசப்படாமல் போகும் புதிர்களை விவரிக்கும் கட்டுரை அபாரமானவை. மொழி ரீதியாகவும் தனித்து விளங்குபவை. ஆட்டுக்கால் சூப்பு பற்றிய கட்டுரை ஒரு சிறுகதைக்கு உரியது. உப்புகண்டம், முருங்கைக்கீரை, ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவை அவருடைய மருத்துவ பின்புலத்துடன் சேர்ந்து துலங்குகிறது. மொத்தத்தில் இவை ஒரு அமர்வில் தொடர்ச்சியாக வாசிக்கத்தக்கதாக வடிவம் கொண்டுள்ளது.

Related Books