Description |
|
இந்தப் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்,. பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது. முனைவர் கிருபா நந்தினிக்கு இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. தமிழின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளராக அவர் தனது துறை சார்ந்து முத்திரை பதித்துள்ளார். பள்ளி – கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். |