1 / 3
The Woods

ஒற்றைப் பனை

Author வையவன்
Publisher வேரல் புக்ஸ்
category கவிதை
Edition 1st
Format paperback

₹123.5

₹130

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பொதுத்தன்மையிலிருந்து விலகி கட்டமைக்கப்பட்டவற்றின் மீது கேள்விகளை எழுப்பவும், அதைவிடச் சிறந்த ஒன்றைப் படைக்கவும் தூண்டும் கோட்பாடுகளின் வழியில் நின்றுகொண்டே புறக்கணிக்கப்பட்ட ஒன்றிற்காகவும், கைவிடப்பட்ட ஒன்றிற்காகவும் குரலெழுப்புவது என்பது கவிதைகளாலேயே சாத்தியப்படுகின்றது. அப்படியான படைப்புகளைக் கண்டடைந்து வாசிக்கும்போது இப் பிரபஞ்சத்தின் முடிச்சுகளை நெருங்க முடிகிறது. யானைகளுக்கு வலசை செல்லும் பாதை இருப்பதைப் போல ஆமைகளுக்கும் அது இருக்கிறது. அதைக் கண்டுதான் தமிழன் தன் நாகரிகத்தை விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படிக் கவனிக்கப்படாத ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கதையோ, கவிதையோ அழிந்து போகின்றன. பண்பாட்டுக் கூறுகளைக் கடத்த முடியாமல் போய்விடுகிறது. மட்டுப்படுத்தப்படும் தேடல்கள் வரலாற்றைத் திரித்துக் கூற வழிவகை செய்கின்றன. இவ்வாறான பதிவுகளை நிலத்திலிருந்து தொடங்க வேண்டும். அப்படி தன் நிலத்தையும் மனிதர்களையும் கொண்டாடக்கூடியவர்தான் பாவலர் வையவன் அவர்கள். பகுத்தறிவின் முழுமையான அர்த்தங்களை நூலிழைகளாக்கித் தன் பாக்களால் நெய்து அழகிய புத்தம் புதிய வடிவமாக்கித் தருவதில் இவருக்கு நிகர் இவரே.

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160