1 / 3
The Woods

விகடன் சாய்ஸ் கோடை கொண்டாட்டம்

Author ஆசிரியர் குழு
Publisher பாரதி புத்தகாலயம்
category சிறுவர் நூல்கள்
Edition 1st
Format paperback

₹351.5

₹370

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

1) பாலம் தொகுப்பும் மொழிபெயர்ப்பும் யூமாவாசுகி. பல்வேறு உலக மொழிகளில் வெளியான சின்னச் சின்ன சிறந்த கதைகளின் தொகுப்பே “பாலம்” 6-8 ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் மொழியில் எழுதப்பட்டுள்ளது.அபூர்வ சகோதரர்கள் கதையில், அண்ணன்- தம்பி இருவரும் அன்போடு வாழ்வர். ஒரு மந்திரவாதியின் சாபத்திற்கு ஆளான அண்ணனை, தம்பி மீட்பதே சுவாரஸ்யமான கதை. இதுபோல 33 கதைகளின் தொகுப்பு இந்நூல். 2) குட்டி இளவரசன் ,வெ. ஸ்ரீராம் உலகம் முழுக்க அதிகமான குழந்தைகளால் படிக்கப்பட்ட மிக முக்கியமான சிறுவர் நாவல் இது. ஒரு சிறுவன் வெவ்வேறு விதமான கிரகங்களுக்குப் பயணிக்கிறான். அந்த கிரகங்கள் பற்றியும், அங்கே அவன் சந்திக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் பற்றியும், சொல்லப்படும் அழகான பயணக்கதைதான் குட்டி இளவரசன். முழுக்க விநோதங்களும் அற்புதங்களும் நிறைந்துள்ள இந்த நாவல், கூடிய சீக்கிரம் திரைப்படமாகவும் வரப்போகிறது. 3, வாத்து ராஜா, விஷ்ணுபுரம் சரவணன் பள்ளியில் படிக்கும் அமுதாவுக்கு, பாட்டி ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையை முழுவதும் சொல்வதற்குள் அமுதா தூங்கி விடுகிறாள். ஆனால் அடுத்த நாள் பள்ளியில் பார்க்கும் பொருட்கள் எல்லாம் கதையில் நடந்தது போலவே இருக்கின்றன. அமுதாவும் அவளது தோழி கீர்த்தனாவும் அவர்களின் புதிய ஃபிரண்ட் அணிலும் சேர்ந்து கதையின் முடிவைத் தேடிப் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் தான் வாத்து ராஜா 4.மீசையில்லாத ஆப்பிள்,எஸ்.ராமகிருஷ்ணன் நம் எல்லோர் வீட்டிலும், ப்ரிட்ஜ் இருக்கும். காய்கறிகள், பழங்கள் ,பால் எனப் பல பொருட்களை வாங்கி வைத்திருப்போம் தேவைப்படும்போது அந்தப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், சில பொருட்களை நீண்ட நாட்களாக ப்ரிட்ஜ்லேயே வைத்திருப்போம் அல்லவா? அவை தங்களுக்குள் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த நாவல், பரபரவென படித்துவிடக்கூடிய ஜாலியான நாவல். குழந்தைகள் அன்றாடம் பார்க்கும் பொருட்களே கதைக்கு வருவாதல் உற்சகமாகி உடனே படித்து விடுவார்கள் 5. பச்சை நிழல் , உதயசங்கர் சிறுவர்களுக்காக பல நூல்களை மொழி பெயர்த்த உதயசங்கர் எழுதிய கதைகளின் தொகுப்பு. சிறுவர்கள் சோர்வு இல்லாமல் படிக்கும்விதமான கதைகளை எழுதியிருக்கிறார்.’பச்சை நிழல்’ கதை, மிகவும் வித்தியாசமானது. தண்ணீர் பஞ்சம் உள்ள ஓர் ஊரில் றிம்பத் தூரம் சென்று தண்ணீர் எடுத்துவருகிறார்கள் லட்சிமியும் சுகந்தியும். அந்தப் பகுதியில் பசுமையாக ஒன்றுமே கிடையாது. அங்கு ஒரு புல்லை இருவரும் எப்பிடிக் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை. இந்நூலில் உள்ள 15 கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இருப்பது இதன் சிறப்பு.

Related Books


5% off Chittu and Kakabook Add to Cart

Chittu and Kaka

₹76₹80