![]() |
Description |
சந்திரமதி என்ற இந்தச் சிறு நாவல் மேவார் ராணா அமரசிம்மன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தைக் கொண்ட புனையப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அக்பரிடம் போரிட்டு மேவார் சுதந்திரத்தைக் காப்பாற்றிய ராணா பிரதாப சிம்மன் தனக்குப் பின்னால் மேவாரின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நம்பினான். சுகத்துக்காக சுதந்திரம் தியாகம் செய்யப்படும் என்று எண்ணினான். ஆகவேதான் இறக்கும் தருவாயில் தனது படைத் தலைவர்களிடம், 'சுகத்தை நாடி சுதந்திரத்தை இழக்க மாட்டோம்” என்று சத்தியமும் வாங்கிக் கொண்டான். |