1 / 3
The Woods

ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை

Author கன்யூட்ராஜ்
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
category நாவல்
Pages 527
ISBN 9788123441993
Edition 1st
Format paperback

₹437

₹460

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வரலாற்றுப் பிழைகள் ஏதும் இல்லாத வகையில் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இது. மகாத்மா காந்தியின் இறுதிச் சில மாத வாழ்வைச் சொல்லும் இந்நூல் இரு முக்கியமான நிகழ்வுகளைப் பேசுகிறது. ஒன்று அவர் விரும்பாத இந்திய பாக் பிரிவினையை ஒட்டி இங்கு நடந்த கொடும் கொலை வெறியாட்டம். நூல் விரிக்கும் இரண்டாம் நிகழ்வு இந்த வன்முறைகளுக்கு இடையே கோட்சே கும்பல் காந்தியைக் கொல்ல மேற்கொண்ட சதிகள். முதல் முறை அவர்கள் தோல்வியுற்று, இரண்டாம் மூறை அதை வெற்றிகரமாக நிறைவேற்றியதுடன் நாவல் முடிகிறது. - அ.மார்க்ஸ் இந்த நாவலை எழுதியுள்ள நண்பர் கன்யூட்ராஜ், காந்தியின் கடைசி நாட்களை மூன்று தமிழ் இளைஞர்கள் நேரடியாக அருகிலிருந்து பார்த்ததைப் போன்று ஒரு சித்திரத்தை வரைந்து காட்டியுள்ளார். இன்று. புதிய நூற்றாண்டின் முகப்பில் இந்துத்துவப் பேரரசு எழுச்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் சூழல்களில், காந்தியையும் அவரது கொள்கைகளையும் அவர் கொலை செய்யப்பட்ட வரலாற்றுக் கொடூரத்தையும் ஆழமான கோட்பாட்டுச் சந்திப்புகளில் நிறுத்தி ஆசிரியர் விவாதிக்க வைத்திருக்கிறார்.

Related Books