Description |
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவியாக இல்லாமல், ரசனையோடு சொல்லுவார். கடவுளோடு விவாதிக்கும் கந்தசாமி பிள்ளையாக மாறுவார். வண்ணதாசனின் “நிலை” கதையின் கோமுவாக மாறி, நம்மை அழ வைப்பார். வண்ணநிலவனின் “பிரயாணம்” கதையின் நமச்சிவாயம் பிள்ளை தாத்தாவாக ஆகி சிரிக்கவும் வைப்பார். |