Description |
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் சுருக்கமான அறிமுகம் அவருடைய படைப்புகளை மேலும் நெருங்கிச் சென்று வாசிப்பதற்கான உந்துதலை வழங்கும். |