Description |
|
நிமித்தம்: நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிட செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. |