ஜென்கவிதையின் வாசகன் தனது பரபரப்புகளில் இருந்து விடுபட்டு கூழாங்கற்களை கையில் ஏந்தி தடவுவது போல வார்த்தைகளை மிருதுவாக தடவி அனுபவித்து அறியும் போது அவன் இயற்கையின் முடிவற்ற பாடலைக் கேட்கத்துவங்குகிறான். அதுவே ஜென் நிலை.