1 / 3
The Woods

மனுசி

Author பாமா
Publisher விடியல் பதிப்பகம்
category நாவல்
Pages 223
ISBN 97888189867478
Edition 1st
Format paperback

₹123.5

₹130

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

திருமணம் ஆகாத ஒரு பெண், அதிலும் ஒரு தலித் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நினைத்து நாம் மலைத்துப் போகிறோம். திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆண்களால் பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் இதில் திருமணம் ஆகாத ராசாத்தி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதோடு இன்னும் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார். திருமணம் ஆகாத தலித் பெண் தனியாக வீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. * தனியாக இருந்தால் வாடகை வீடும் கிடைக்காது. * சொத்துச் சேர்க்க, சேமிக்க உரிமை இல்லை. * அவரது வீட்டிலிருந்து எதையும் திருடலாம். * நிரந்தரமாக ஒரு இடத்தில் பணிபுரியும் உரிமை இல்லை. * எப்போதும் அடுத்தவர்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும். * தேவையானது என்ன என்பதைச் சமூகம் நிர்ணயிக்கும். * குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது. * நல்ல வைபவங்களுக்குச் செல்லக்கூடாது. * பூ, பொட்டு வைத்தாலும் குற்றம். வைக்காவிட்டாலும் குற்றம். * சுதந்திரமாக வாழ உரிமையில்லை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதைப்போன்ற பல பதிவுகளை இதில் காணலாம். இந்த நாவலில் பல பரிமாணங்கள் இருப்பதை நாம் உணர முடிகிறது. ராசாத்தியின் சரித்திரமாகத் தோன்றினாலும், ராசாத்தி பிறந்து வளர்ந்த மங்காபுரம் ஊரில் உள்ள தலித்துகளின் சரித்திரமாகவும், வளவனூரில் அவர் வாழும் காளவாசல் தெருவில் வாழ்பவர்களின் சரித்திரமாகவும் இருக்கிறது.

Related Books