1 / 3
The Woods

கசார்களின் அகராதி

Author மிலோராத் பாவிச் , Translator : ஸ்ரீதர் ரங்கராஜ்
Publisher எதிர் வெளியீடு
category புதினம்
Edition 1st
Format paperback

₹475

₹500

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பெர்ஃப்யூம் நாவலுக்குப்பிறகு அதிகம் பேசப்பட்ட ஐரோப்பிய இலக்கிய வெளிப்பாடு. அடுத்துடுத்து பலநாடுகளில் விமர்சனரீதியில் ஆரவாரமான வெற்றியும் மிகச்சிறந்த விற்பனையையும் ஒருங்கே பெற்றது. கசார்களின் அகராதி வியப்புக்குரிய திறத்தோடு புனைவின் வழக்கமான எல்லைகளைத் தகர்த்து எறிந்தவொரு எழுத்தாளரின் சர்வதேச அறிமுகம் எப்படியிருக்குமென அடையாளமிடுகிறது. இது முழுமையான ஓர் உலகம் குறித்த மற்றும் தொலைந்துவிட்ட சிறந்த மனிதர்களைப் பற்றிய புதினம். இதுவோர் அறிவின் புத்தகம். நிகழ்காலத்தைப் பற்றியது மற்றும் சிலநேரங்களில் எதிர்காலத்தைப் பற்றியதும், அதனால்தான் ஆயிரத்தி நூறு வருடங்களுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. இது மிகச்சிறந்த (மற்றும் கட்டுக்கடங்காத) மூன்று அறிவாளிகளைப் பற்றியது — ஒரு கிறிஸ்தவர், ஒரு யூதர், ஒரு மொஸ்லம் — உலகம் எவ்வழியிலிருக்க வேண்டுமெனும் இவர்களின் விவாதம் முடிவுறவேயில்லை. மலைக்கச்செய்யும் தத்துவத்தினால் மூடப்பட்ட மர்மம் இது. மர்மத்தில் பொதியப்பட்ட அரேபிய இரவுகளின் காதற்புனைவு. காதற்புனைவில் பொதியப்பட்ட பல்வேறு கொலைக் கதைகள். ரகசியங்களில் சுருட்டப்பட்டுள்ள ஒளியூட்டம். குறும்பாகச் சீண்டும் அறிவார்ந்ததொரு விளையாட்டு மற்றும் ஒரு வியப்பூட்டும் சாகசம். இதன் ஆகச்சிறந்த பாத்திரங்கள் காணாமல் போகிறார்கள், பிறகு அறியமுடியாதவொரு மாறுவேடம் புனைந்து மறுபடி தோன்றுகிறார்கள். பல சாத்தான்கள் வருகின்றன. ரத்தக்காட்டேரிகளும் வருகின்றன. எதிராளியை உறக்கத்தில் தொடரும் ஒரு குழுவின் பூசாரிகள், ஏனெனில் அவர்கள் கனவை வேட்டையாடுபவர்கள். இது இரண்டு பிரதிகளாக வருகிறது, ஒன்று ஆண் மற்றொன்று பெண், இரண்டும் பதினேழு (முக்கியமான) வரிகளில் மட்டுமே வேறுபடுகின்றன. வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், ஒரு கடவுச்சீட்டைப்போல: கசார்களின் உலகத்தில் அவர்களது பயணம் அவர்களுடைய தேர்வைப் பொறுத்து மாறுபடும். இரண்டு வகையிலும், காதல், மரணம், மற்றும் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அத்தனை சாகசத்திற்கான சாத்தியக்கூறுகளும் கொண்ட புதினத்திற்குள் தங்களை இழக்க விரும்புபவர்கள் பாவிச்சைக் கையிலெடுத்து மூழ்கலாம்.அவர்கள் மெய்மறந்து பரவசத்திற்குள்ளாவார்கள்.

Related Books


5% off வேர்கள்book Add to Cart

வேர்கள்

₹1425₹1500