Description |
'மண் மணக்கும் பிரதி' என்று பிரதி நாவலைச் சொல்லலாம். நிலங்கள் பேசுமா? பேசும் என்கிறார் ஜெயன் மைக்கேல். வயல்கள் காலத்திற்கேற்ப குரல் எழுப்பும் என்று சொல்லும் போழுதே, நிலம் வாயினால் பேசுவதில்லை; நாற்றத்தினால் பேசும் என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழில் 'நாற்றம்' என்ற சொல் மணம் - வாசனை எனப் பொருள் தருவது நாமறிந்ததே. "விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு நிலங்களாகவும் அலுவலகங்களாகவும் மாறிவரும் காலத்தில், நிலத்தின் குரலைப் பேசும் கதை இது. இன்றைய சமகாலப் பிரச்னைகளை உளவியல் கலந்த புனைவின் மூலம் முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிற கதை கூறல் முறையில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார், ஜெயன் மைக்கேல். |