1 / 3
The Woods

தோற்றவர் வரலாறு

Author அ.முத்துலிங்கம்
Publisher நற்றிணை பதிப்பகம்
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

சில நாட்களுக்கு முன்னர் இயற்கையின் பேரதிசயம் ஒன்றைப் பார்த்த கதையை சு.ரா.விடம் கூறினேன். சு.ரா வசித்த வீட்டிலிருந்து அந்த இடம் சற்று தூரத்தில்தான் இருந்தது. பெயர் Ano nuevo அதாவது புதுவருட முனை. ஒவ்வொரு ஆண்டும், வருட ஆரம்பத்தில் அலாஸ்காவிலிருந்து 4000 மைல்கள் சளைக்காமல் நீந்தி ஆண் சீல்கள் இந்த முனைக்கு வருகின்றன. அதே மாதிரி பெண் சீல்கள் எதிர்ப்பக்கமான ஹவாயி லிருந்து 3000 மைல்கள் நீந்தி வருகின்றன. அவை புது வருட முனையில் சந்தித்துக்கொள்கின்றன. அவற்றின் காதல் விளையாட்டு பிப்ரவரி 14 அன்று உச்சமடையும். அதில் இருந்துதான் காதலர் தினம் உண்டாகியது என்று சிலர் சொல்கிறார்கள். பெண் சீல்கள் குட்டிகளை ஈன்ற பின்னர் ஹவாய்க்கும் நீந்திப் போய்-விடும். ஆண் சீல்கள் அலாஸ்காவுக்குப் போகும். மறுபடியும் அடுத்த வருடம் அவை சந்திக்கும். இது பற்றியும் பேசினோம். புறப்படும்போது சு.ரா என் அனுபவத்தைக் கட்டுரையாக எழுதச் சொன்னார். நான் அதுவரை கட்டுரை எழுதியது கிடையாது. அப்படித்தான் நான் முதன்முதல் கட்டுரை எழுதினேன். இப்பொழுது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

Related Books