Description |
சினிமா பற்றி நிறைய எழுதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக, ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகத்தைப் பிரதியெடுப்பாதாகவே இருக்கின்றன. விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சில மொன்னையான அரசியல் அவதானிப்புகளுக்குள் அடக்கப்படுவதாக இருக்கின்றன. அதன் ரத்தமும் சதையுமான இயல்பான சில விஷயங்கள் குறித்துப் பேசப்படுவதில்லை. கலாப்ரியா பேசியிருக்கிறார் இத்தொகுப்பில். ஒரு கவிதை, என்னை இன்னொரு கவிதை எழுதத் தூண்டினால் அதை நான் நல்ல கவிதையாகக் கொள்கிறேன் என்னும் அவர், தன்னை அப்படிப் பாத்தித்த கவிதைகள், தன்னை வாயடைத்து, உறைந்து நிற்கச் செய்த கவிதைகளை மட்டுமல்ல மற்ற படைப்புகள் படைப்பாளிகள் பற்றியும் இலகுவான மொழியிலேயே இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார். |