Description |
வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்துவம் எப்படி உருவாகியது என்பதற்கு நிறைய உதாரணங்களை இந்த நூலில் காணமுடிகிறது. இவ்வளவு வெளிப்படையாகத் தனது அந்தரங்களைப் பகிர்ந்து கொண்ட கவி வேறு யாருமில்லை. கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ என்னும் இந்த நூலை இலக்கிய வாசகர்களும் கவிஞர்களும் அவசியம் வாசிக்கவேண்டும். |