Description |
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன். - வண்ணதாசன் |