Description |
கதைகளும் பாடல்களும் நிறைந்த ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய பள்ளி வகுப்பறைகளை இந்நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாவண்ணன். கல்வி என்பதே ஒரு கொண்டாட்டமாக இருந்தகாலம் அது. பாவண்ணனின் அனுபவங்களில் பள்ளிக்காலம் என்பது எழுத்தறிவோடு, விளையாட்டு, சமூகம், அறிவியல், இயற்கை, இலக்கியம், கலைகள் என அனைத்தையும் அறிமுகப்படுத்தும் பொற்காலமாக இருந்ததை நுட்பமாக உணரமுடிகிறது. பள்ளிக்காலத்தில் அம்புலிமாமா, அணில் என குழந்தைக் கதைகளில் தொடங்கி தற்செயலாக அழகிரிசாமியையும் ஜெயகாந்தனையும் வந்தடைந்த தன் வாசிப்புப்பயணத்தைப் பற்றி தன் நினைவிலிருந்து பாவண்ணன் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு அனுபவக்குறிப்பும் வாசகர்களுக்கு மகத்தான அனுபவத்தை அளிக்கிறது. |