Description |
|
கவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்கட்டுரைகளும் அவற்றின் சுயேச்சையான நோக்கு, நுட்பமான அவதானிப்பு, அசாதாரணமான மொழிவீச்சு, அரிதான நகையுணர்வு ஆகியவற்றின் சிறப்பால் தனித்துவத்துடன் மிளிர்கின்றன. |