1 / 3
The Woods

வீழ்ந்தவர்கள்

Author லியா மில்ஸ் , Translator : பெர்னார்ட் சந்திரா
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
ISBN 9789386820044
Edition 1st
Format Paperback

₹316.35

₹333

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கேட்டி கிரில்லி - பழைமைவாதச் சமூகத்துக்குள் தனது இடத்தைத் தேடமுயற்சி செய்துகொண்டிருக் கும் இளம்பெண் - அவள் எதை நினைத்துப் பயந்துகொண்டிருக்கி றாளோ அந்தச் செய்தியை அறிகிறாள்: அவளது அன்புக்குரிய இணைப் பிறவிச் சகோதரன், லியாம் மேற்குப் போர்முனையில் கொல்லப்பட்டான். ஒருவருடம் கழிந்தபின் திடீரென உயிர்ப்புத் திருநாள் விடுதலைக் கிளர்ச்சி வெடித்து டப்ளின் நகரம் வன்முறை யால் சூழப்பட்ட நிலையில் தனது சகோதரன் உயிரை விடக் காரணமாயிருந்த கொள்கைக்கும் தனது உணர்வுபூர்வமான நாட்டுப்பற்று, தனது நகரம் அதன் மக்கள் மேலுள்ள நேசத்துக்குமிடையே நிலைதடுமாறுகிறாள் கேட்டி. தனது நண்பர்கள் வீட்டில் அடைக்கலம்புகும் அவள், தனது சகோதரனுடன் போர் முனையிலிருந்த ஹ்யூபி வில்சனைச் சந்திக்கிறாள். அப்போது புதிய வாழ்க்கையைக் கனவுகண்டுகொண்டிருக்கும் அந்த இரு இளவயதினருக்கிடையே துடிப்பான உரசல்கள் கிளர்ந்தெழு கின்றன. விடுதலைக் கலவரத்தினால் தலைகீழாகப் போய்விட்ட கேட்டியின் வாழ்க்கையில், அவள் இதுவரை கற்பனை செய்திராத சாத்தியங்கள் தென்படுகின்றன. ‘வீழ்ந்தவர்கள்’ புதினத்தில் லியா மில்ஸ், வன்முறைக்கும் இழப்புக்கும் நடுவில் புரிதலையும் தன்னம்பிக்கையையும் உணர்ந்து ஆளாகும் ஓர் இளம்பெண்ணை வாசகர் மனதில் நிலைபெறும் வசீகரத்துடன் காட்சிப்படுத்துகிறார். லியா மில்ஸ் அயர்லாந்து நாட்டு எழுத்தாளரான லியா மில்ஸ் நாவல், சிறுகதை, புனைவற்ற படைப்பு என்ற தளங்களில் இயங்கிவருபவர். இவரது முதல் படைப்பான ‘அனதர் ஆலிஸ்’ 1996இல் வெளிவந்து ‘ஐரிஷ் டைம்ஸ்’ பத்திரிகையின் சிறந்த நாவல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 2005இல் வெளிவந்த அவரது இரண்டாவது நாவலான ‘நத்திங் சிம்பி’ளும் அந்த ஆண்டுக்கான அயர்லாந்தின் சிறந்த நாவலாகப் பரிந்துரை செய்யப்பட்டது. ‘யுவர் ஃபேஸ்’ என்ற இவரது தன் அனுபவ வாய்ப்புற்றுநோய் பற்றிய நூல் 2007இல் வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ‘ஃபாலன்’ என்ற அவருடைய இந்த மூன்றாவது புதினம் 2014இல் வெளியானது. சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் கலைமேம்பாட்டுக் குழுக்களில் பங்குபெறுவதோடு கலை ஆலோசகராகவும் பணிசெய்கிறார். டப்ளினில் பிறந்து இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆண்டுகள் வசித்த பின்னர் தற்போது அயர்லாந்தில் வாழ்ந்துவருகிறா

Related Books