1 / 3
The Woods

சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்

Author முனைவர் இரா.அறவேந்தன்
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 200
ISBN 9788189945527
Edition 1st
Format paperback

₹213.75

₹225

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

தமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரசோழியத்தையும் ஆந்திர சப்த சிந்தாமணியையும் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணமான சமூக, அரசியல், வரலாற்றுக் கூறுகள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத இலக்கண மரபு இவ்விரு இலக்கணங்களின் உருமாதிரியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இரண்டு இலக்கணங்களுமே அம்மரபிலிருந்து வேறுபடும் தன்மை ஒப்பீட்டில் தெளிவாக வரையறுத்துக் கூறப்படுகின்றது. இவ் வரையறையில் வெளிப்படும் மணிப்பிரவாளம் பற்றிய சிந்தனைகளை மலையாள மொழியின் முதலாவது இலக்கணமான லீலாதிலகத்தோடும், கன்னட மொழியின் முதலாவது இலக்கணமான கவிராஜமார்க்கத்தோடும் ஒப்பிட்டு, புறக்கட்டமைப்பில் இவற்றிடையே ஒற்றுமை இல்லையென்றாலும் அணி மற்றும் யாப்பியல் கருத்துக்கள் பொதுவாக அமைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலக்கண ஆய்வில் புதிய தடம்பதிக்கும் நூல். - சு. இராசாராம்

Related Books