1 / 3
The Woods

ஆனந்த விகடன் பொக்கிஷம்

Author ஆசிரியர் குழு
Publisher விகடன் பிரசுரம்
category பொது நூல்கள்
Edition 1st
Format paperback

₹218.5

₹230

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை எண்ணி மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்த அதே வேளையில், உங்களில் பலர் தெரிவித்திருந்த ஒரு நியாயமான ஆதங்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒவ்வோர் ஆண்டும் நடந்த முக்கியச் சம்பவங்களை ஆனந்த விகடன் எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை ‘காலப் பெட்டகம்’ புத்தகம் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... முக்கிய சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு துளியளவே படிக்கக் கிடைத்தது. உதாரணமாக, தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு கல்கி எழுதிய விமர்சனத்தில் ஆரம்பச் சில வரிகள்தான் எங்களுக்குப் படிக்கக் கிடைத்தன. அந்த வரிகளைப் படித்ததுமே, Ôஇந்த விமர்சனக் கட்டுரையை முழுமையாகப் படிக்க மாட்டோமாÕ என்று அடக்க முடியாத பேராவல் உண்டாகிவிட்டது. எனவே, அடுத்த முறை புத்தகம் வெளியிடும்போது, இதை மனத்தில் கொண்டு, அந்தக் காலத்தில் விகடனில் வெளியான சினிமா, அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளை அதிகம் குறைக்காமல், முடிந்தால் முழுமையாக எங்களுக்குப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று உங்களின் எண்ணத்தை கடிதம், இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றச் சாதனங்களின் மூலம் எங்களிடம் தெரிவித்துள்ளீர்கள். இதோ, அது நிறைவேறுகிறது - இந்தப் பொக்கிஷத்தில்! காந்தி முதல் ஜெயலலிதா வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... இப்படி, அரசியல், சினிமா, ஆன்மிகம், இசை, நடனம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அந்தந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனின் பங்களிப்பை அதே சுவையோடும் ரசனையோடும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். லக்ஷ்மி, ஜெயகாந்தன், சுஜாதா... என ஸ்டார் ரைட்டர்களின் சிறுகதைகளும் உண்டு. உங்கள் ரசனையும், தேடலும்தான் இந்தப் பொக்கிஷத்தில் மின்னும் அத்தனை மணிகளுக்கும் ஆதாரம்!

Related Books


5% off சமம்book Add to Cart

சமம்

₹20