1 / 3
The Woods

கிருஷ்ணவேணி

Author பா.ராஜநாராயணன்
Publisher விகடன் பிரசுரம்
category நாவல்
Edition 1st
Format paperback

₹109.25

₹115

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பாபநாசம், பாணதீர்த்த அருவிகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவை. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்தானே! வருடம் முழுதும் தண்ணீர் கொட்டும் வற்றாத அருவியான பாபநாசம் அருவியில், அழகும் ஆபத்தும் கலந்தே இருப்பது இந்த உண்மைக் கதையைப் படித்தால் உங்களுக்குப் புரியும். இயற்கை அழகை ரசிக்க வரும் இளைஞர்கள், இளமைக்கே உரிய துணிச்சல் கொண்டு அருவியோடு விளையாடும்போது, எதிர்பாராத விதமாக தங்கள் இன்னுயிரையும் இழக்க நேரிடுகிறது. அப்படி ஒருவர்தான் இந்தப் படைப்பின் நாயகி கிருஷ்ணவேணி. ஆனால், இன்றளவும் அந்தப் பகுதியில் பேசப்படும் செவிவழிக் கதைகள் வாயிலாக, கிருஷ்ணவேணி ஒரு கடவுளாக ஒரு சிலரால் சித்தரிக்கப் படுகிறாள். அது எப்படி? ஏன்? _ சுவாரசியமான இந்த நூல், உங்களுக்கு அந்த விவரங்களைச் சொல்லும். நூலாசிரியர் பா.ராஜநாராயணன், இளமைப் பருவம் முதலே அந்தப் பகுதிகளில் வளர்ந்தவர் என்பதால், மண்ணின் வாசனையோடு அழகாக இந்த நிஜக் கதையைப்

Related Books