Description |
மனிதன் படைப்பினங்களிலேயே மிகவும் உன்னதமான உயர்வான படைப்பினம் என்பதற்கான ஒரே காரணம், அவன் மட்டும்தான் நாளைய வாழ்க்கைக்காக வாழ்பவன், நன்மை, தீமைகளைப் பகுத்தறிபவன்; நியாயம், நேர்மையையும், அநீதி, அக்கிரமங்களையும் பிரித்தறிபவன். நாளைய வாழ்க்கையைப் பற்றி பரம்பரைகளுக்கும் திட்டமிடுபவன். நாளைய வாழ்க்கை என்பது மறைக்கப்பட்டுள்ள மறைவான நல்வாழ்க்கை . அந்த வாழ்க்கை அவரவர் இருதயத்தில் அழகான விருப்பங்களாகப் படைக்கப்பட்டு, அமைக்கப்படுகின்றன. மனக்கண்களில் அந்த விருப்பங்களை அழகான காட்சிகளாக்கி அந்தச் சூழ்நிலையில் நம்மை முதன்மையான நபர்களாக்கி அந்த மனக்கண் வாழ்க்கையில் ஒரு க்ஷணத்தில் வாழவைத்து, அதன் அழகை ரசிக்கச் செய்து, ருசிக்கச் செய்து பின்னர் அந்த வாழ்க்கையிலிருந்து,மனதிலிருந்து இவ்வுலக வாழ்க்கைக்கு வெளிப்படுத்தப்படுகின்றோம். |