Description |
மருத்துவக் கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகம் உங்களுடைய இல்லங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அத்தியாவசியத் தேவையாகும். இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் உங்களுடைய இல்லங்களில் “நோய் நொடியற்ற வாழ்க்கை !” எப்படி வாழ்வது என்பதை தெளிவாக அறிவிக்கும். உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் காரணம் ஆங்கில மருத்துவம் மட்டுமேதான் என்பதை பல உதாரணங்களுடன் தெளிவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோயையும் நாட்பட்ட நோய்களாக மாற்றி, பின்னர் அந்த நோய்கள் உயிரையே குடிக்கும் அளவுக்கு அதிகரிக்கச் செய்வதும் ஆங்கில மருத்துவம்தான் என்பதை ஓரிரு கட்டுரைகளிலேயே புரிந்து கொள்ள முடியும். இதன் கட்டுரைகளை ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டிய அவசியமில்லை . எந்தக் கட்டுரையைப் படித்தாலும் சரி, படித்து முடிக்கும் வரையில் இந்தப் புத்தகத்தை மூடி வைத்து விட முடியாது. அவ்வளவும் சத்தியமான உண்மை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஆங்கில மருத்துவத்தினால் உருவாக்கப்பட்ட அசாதாரணமான சுகாதாரச் சூழ்நிலைகளை, அவற்றிற்கான காரணம் என்ன? எவ்விதம் ஏற்பட்டது? போன்றவற்றை பிரித்தறிவித்து, தெளிவாக்கக் கூடியதாக அமையப் பெற்றிருக்கிறது இந்தப் புத்தகம்ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறதோ, அதற்கு நேர்மாற்றமாக செயல்பட்டாலே போதும் பெரும்பாலான நோய்கள் நம்மை விட்டும் நீங்கும். இன்னும், “அதிகபட்சமான நோய்கள் நம்மை நெருங்கவும் நெருங்காது” என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். ஏற்கனவே வெளியான மருத்துவக் கட்டுரைகள் புத்தகத்தின் தொடர்ச்சியாக மருத்துவக் கட்டுரைகள் பாகம்-2 ஆக வெளியிடப்படும் இப்புத்தகம். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் போது, இது மருத்துவ புத்தகம் அல்ல! தெளிவான நடைமுறைக்கு சாத்தியமான; சுகமான வாழ்வுக்கு ஆதாரமான; அமைதியான மன நிலைக்கு ஏற்ற; ஒவ்வொருவரின் இயற்கைக்கும் பொதுவான; ஆழமான சிந்தனைகள் அடங்கிய ஒரு கருவூலக் களஞ்சியம் என்பதை உங்கள் உள்ளம் கூறுவதை நீங்கள் உணர்வீர்கள். இதுவே இந்தப் புத்தகத்தினுடைய சிறப்பு அம்சமும், இதன் வெற்றியும் ஆகும். |