Description |
மனதை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நல்ல நிலையில் இருக்கும் பொழுது மட்டும்தான் மனம் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். கெட்டவற்றையும், பொய்யானவற்றையும் அதிகமாகக் கேட்கும் பொழுது, குறிப்பாக மருத்துவ அறிவை நாம் படிக்கும் போதோ, கேட்கும் பொழுதோ அல்லது கேள்வியுறும் பொழுதோ மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். ஒரு அணுவளவு கூட இந்த அறிவானது நம்முடைய உள்ளத்தில் நுழைந்து விட்டாலும், இறைவனுடைய அருளாக நம்முடைய மனதில் இறக்கப்பட்டிருக்கக் கூடிய சுகமாகுங்கள் என்ற பெரும் ஆசீர்வாதம் நம் உள்ளத்தை விட்டும் நீங்கி விடும் அல்லது அந்த ஆசீர்வாதத்தை தீட்டுப்பட்டதாக ஆக்கி விடும். இந்தச் செயல் மிகவும் மோசமான மனநிலையை ஏற்படுத்திவிடும். இதனை உணர வேண்டியது உங்களுக்கு இறைவழி மருத்துவம் கைகூட வேண்டும் என்ற சத்தியமான உணர்வுக்கு அவசியமானது. உணர்ந்து செயல்படுங்கள். உங்களுடைய மனதில் இருக்கக் கூடிய ஒவ்வொரு விருப்பமும் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்பது உங்களுடைய ஆத்மார்த்தமான விருப்பமாக இருக்குமானால், அல்லது இறைவனுடைய மகாசக்தி உங்களுடைய ஆசீர்வாதமாக உள்ளத்தில் இருப்பதை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டதாக இருக்கிறது... |