Description |
உச்சி வெயில் எஸ்.வி.ராஜதுரை எழுதிய எந்த நூலாக இருந்தாலும் அதைக் கற்றல் நோக்கோடு அணுகுவது என் வழக்கம். அவசியமான தகவல்கள். உரிய கோட்பாட்டு விளக்கம், அதைப் பொருத்துதல். சுயமான பார்வை என அனைத்தும் சேர்ந்து ஒரு பெட்டகம் போன்ற தன்மையுடன் அவரது ஒவ்வொரு கட்டுரையும் அமைந்திருக்கும். சிறுகட்டுரை என்றாலும் அப்படித்தான். உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக அறிவுத்தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர் ஆளுமை வியப்பளிக்கக் கூடியது. |